பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ்க்கு மீண்டும் கொரோனா உறுதியானது

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதற்காக இங்கிலாந்து செல்ல இருக்கும் 29 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 12 பயிற்சியாளர் குழுவினரிடம் அவரவர் வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் முன்னாள் அணித்தலைவர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ், முன்னணி பேட்ஸ்மேன் பஹர் ஜமான்,

ஆல்ரவுண்டர் ஷதாப் கான், புதுமுக பேட்ஸ்மேன் ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களை தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த முகமது ஹபீஸ் தனக்கு கொரோனா இல்லை என அறிவித்தார்.

இதனையடுத்து குழப்ப நிலை ஏற்பட்டதால் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த முடிவிலும் பாசிட்டிவ் என வந்துள்ளதால் தனிமையில் இருக்காத ஹபீஸ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்