இங்கிலாந்து அணிக்கு விளையாடினால் சுட்டு விடுவேன் என மிரட்டினார்கள்! இனவாதத்தால் பாதிக்கப்பட்டதை உடைத்த பிரபல வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக பிலிப் டிப்ரிடாஸ் இனவாதப் பிரச்சனையால் தான் சந்தித்த கொடூர நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணிக்காக 44 டெஸ்ட் மற்றும் 103 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 140 மற்றும் 115 விக்கெட்களை வீழ்த்திய டிப்ரிடாஸுக்கு தற்போது வயது 54.

அவர் கூறுகையில், எனது வீட்டிற்கு நிறைய மிரட்டல் கடிதங்கள் வந்திருக்கின்றன. இங்கிலாந்து அணிக்காக விளையாடினால் உன்னைச் சுட்டு விடுவேன் என்றும் மூன்று முறை கடிதம் வாயிலாக சிலர் மிரட்டல் விடுத்திருந்தார்கள். மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து எனது வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டது.

அதன் பின்பு தான் லண்டன் நகரத்திற்குள் அச்சம் இல்லாமல் என்னால் கார் ஓட்ட முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்கள் விடுதியில் தங்கியிருந்தேன். அந்த இரண்டு நாட்களும் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். போட்டியில் பங்கேற்போமா? வேண்டாமா? என்கிற ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்.

ஒருவேளை போட்டி நடைபெறும் போது நான் சுடப்பட்டால் என்று பல விதங்களில் என்னை இனவாதம் அச்சுறுத்தியது. எனக்கு யாரும் உதவி செய்யவில்லை.

என்னுடைய தாயாருடன் இல்லத்திற்குத் திரும்பிய போது, நான் என்றும் உன்னுடன் இருப்பேன் என்று சில ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார். அந்த வார்த்தைகள் தான் என்னைச் சாதிக்கத் தூண்டியது என்று கூறியுள்ளார்.

சில நாட்களாக ஓய்ந்திருந்த இனவாதம் தொடர்பான பேச்சுகள் டிப்ரிடாஸ் மூலம் மீண்டும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்