கொரோனா வந்தாலும் பரவாயில்லை.. நாங்க ஆடியே தீருவோம்: அடம்பிடிக்கும் 2 அணிகள்!

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியில் 10 வீரர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த அணி இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பாகிஸ்தான் வீரர்களும் இங்கிலாந்து தொடருக்காக பாகிஸ்தானில் பயிற்சி மேற்கொண்டவர்கள்.

10 வீரர்கள் பாதிக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து கிளம்பிச் செல்ல உள்ளது. பாதிக்கப்பட்ட வீரர்கள் தவிர்த்து மற்ற வீரர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளனர்.

இங்கிலாந்து அணியும் கொரோனா வைரஸ் அச்சத்திற்கு நடுவே பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் ஆட ஆர்வமாக உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மூன்று மாதமாக எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடக்காத நிலையில், இங்கிலாந்து அணி முதல் அணியாக தங்கள் நாட்டில் டெஸ்ட் தொடரை நடத்த உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி பங்கேற்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது இங்கிலாந்து அணி.

மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த மாதமே இங்கிலாந்து சென்று தனிமையில் இருந்து பின்னர் பயிற்சி செய்து டெஸ்ட் தொடரில் ஆட தயார் ஆகி உள்ளது.

அந்த டெஸ்ட் தொடர் ஜூலை 28 வரை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்