கிரிக்கெட்டில் பவுன்சர் விதிகள் கொண்டுவர காரணம் இதுதான்: டேரன் சமி குற்றச்சாட்டு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

கருப்பின கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணியின் வெற்றிகளை கட்டுப்படுத்தவே கிரிக்கெட் விதிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருவதாக மேற்கிந்திய தீவுகள் முன்னாள் அணித்தலைவர் டேரன் சமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கருப்பின கிரிக்கெட் வீரர்களின் வெற்றிகளை கட்டுப்படுத்தவே போட்டிகளில் பவுன்சர்கள் குறைப்பதற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததாக சமி தெரிவித்துள்ளார்.

முன்னர் ஒரு போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கு தேவைக்கு ஏற்ப பவுன்சர்கள் வீச அனுமதி இருந்தது.

ஆனால் தற்போது ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் மட்டுமே வீச அனுமதிக்கப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் கருப்பின மக்கள் சாதிப்பதை தாம் கண்டதுண்டு என கூறும் சமி, அப்போது கொண்டுவரப்பட்டது தான் பவுன்சர் விதிகள் என தாம் நம்புவதாக சமி குறிப்பிட்டுள்ளார்.

இது தவறான கருத்தாக இருக்கலாம் ஆனால் கிரிக்கெட்டில் கொண்டுவரப்பட்டுள்ள விதிகள் தொடர்பில் தாம் ஆராய்ந்ததில் இது தமக்கு புரிய வந்ததாக சமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்