சச்சினை வீழ்த்தி... சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவான ஜாம்பவான்!

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

மிகச் சிறந்த இந்திய டெஸ்ட் துடுப்பாட்ட வீரரை அடையாளம் காண ரசிகர்கள் இடையே முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் ராகுல் டிராவிட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

லிஸ்டன் இந்தியா என்ற பத்திரிகை முன்னெடுத்த இந்த கருத்துக் கணிப்பில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் இடையே இறுதிக் கட்ட போட்டி நடந்தது.

அதில் சச்சினை வீழ்த்தி ராகுல் டிராவிட் மிகச் சிறந்த இந்திய டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலை தெரிவு செய்தால் அதில் ராகுல் டிராவிட் பெயரை சேர்க்காமல் இருக்க முடியாது.

டெஸ்ட் போட்டிகளில் எப்படி துடுப்பெடுத்து ஆடவேண்டும் என கிரிக்கெட் உலகிற்கு பாடம் நடத்தியவர் அவர்.

இந்த நிலையில், விஸ்டன் இந்தியா பத்திரிக்கை மிகச் சிறந்த இந்திய டெஸ்ட் துடுப்பாட்ட வீரரை தெரிவு செய்யும் பணியை ரசிகர்கள் வசமே விட்டது.

குண்டப்பா விஸ்வநாத், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், வீரேந்தர் சேவாக், விராட் கோஹ்லி, புஜாரா ஆகிய எட்டு வீரர்கள் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.

சச்சின், டிராவிட், விராட் கோஹ்லி, சுனில் கவாஸ்கர் கடைசி நான்கு வீரர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

அதில் டிராவிட், சுனில் கவாஸ்கரையும், சச்சின், விராட் கோஹ்லியையும் முந்தினர். சச்சின் டெண்டுல்கர் - ராகுல் டிராவிட் இடையே இறுதிச் சுற்று போட்டி நடந்தது.

விஸ்டன் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பின் இறுதிச் சுற்றில் 11,400 பேர் பங்கேற்றனர்.

இதன் முடிவில் டிராவிட் 52 சதவீத வாக்குகளை பெற்று முதல் இடம் பெற்றார். சச்சின் டெண்டுல்கருக்கு 48 சதவீத வாக்குகள் பதிவாகின.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்