ஐபிஎல் போட்டிகள் எப்போது எங்கு நடக்கும்?

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக அமுலில் உள்ள நிலையில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஐபிஎல்லை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜெஷ் படேல் கூறுகையில், செப்டம்பர், அக்டோபரில் ஐபிஎல் போட்டிகள் நடக்கலாம், ஐசிசியின் கையிலேயே இருக்கின்றது.

அவுஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் உலகக் கிண்ண டி20 தொடரை ஐசிசி நடத்தவில்லை என்றால், அந்தத் திகதிகளை ஐபிஎல் போட்டிகளுக்காகப் பயன்படுத்திக்கொள்வோம். எனவே ஐசிசியின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ வாசிம் கான், ஆசிய கிண்ணப் போட்டிகளை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமீரகத்தில் நடத்த திட்டமிட்டதாக தெரிவித்தார்.

தற்போது மீண்டும் விளக்கமளித்துள்ள வாசிம் கான், ஐபிஎல் போட்டிகள் குறித்து முறைப்படி அறிவிப்பு வந்தால் ஆசிய கிண்ணப் போட்டிகள் நடத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்