பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு கொரோனா

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி வீரர்கள் மூவருக்கும், தென் ஆப்பிரிக்க அணியில் 7 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வருகிற 28ம் திகதி இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

இதற்காக செல்லும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஷதாப் கான், ஹைதர் அலி, மற்றும் ஹாரிஸ் ராவ்ஃப் ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், பரிசோதனையின் முடிவிலேயே நோய் இருப்பது தெரியவந்துள்ளது, இதனையடுத்து மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் ஒப்பந்த வீரர்கள், பணியாளர்கள் உட்பட 100 பேருக்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது.

முடிவில் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது, அந்நாட்டு விதிகளின் படி பெயர்களை அறிவிப்பது சட்டப்படி விரோதம் என்பதால் அந்தந்த வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்