டோனி மட்டும் இல்லையென்றால் அவ்வளவு தான்! மனம் திறந்து பேசிய இந்திய அணியின் வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

டோனி இல்லையென்றால் பலரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன் உடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் "கிரிக்கெட் கணெக்டட்" நிகழ்ச்சியில் கவுதம் காம்பீர் கலந்துரையாடினார்.

அப்போது 2014 ஆம் ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடர் நினைவலைகள் பகிர்ந்துக்கொண்டார். அந்தத் தொடரில் விராட் கோலி 10 இன்னிங்ஸ் சேர்த்து 134 ரன்களை மட்டுமே எடுத்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டார்

அது குறித்து பேசிய காம்பீர் 2014 மோசமான சுற்றுப் பயணமாக இருந்தது. நானும் அப்போது அணியில் இருந்தேன். அந்த சுற்றுப் பயணத்துடன் பலரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும். ஆனால் வீரர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அரணாக இருந்தார் டோனி. அதவும் கோலிக்கு அவர் மிகவும் உறுதுணையாக இருந்தார் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்