உலக கோப்பை நடைபெற்றால் ரசிகருக்கு அனுமதி வழங்கப்படும் - ஆஸ்திரேலியா

Report Print Kavitha in கிரிக்கெட்

உலக கோப்பை நடைபெற்றால் ரசிகருக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகம் நிலவியிருந்த வேளையில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த ஆஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிக் ஹாக்ளே “ கொரோனா தொற்று உலகளவில் இருப்பதால் 15 அணிகளையும் வரவழைப்பது என்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும் .

உலக கோப்பையில் விளையாட 15 நாட்டு வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட்டால் ரசிகர்களையும் தடுத்து நிறுத்த மாட்டோம். போட்டியை பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ரசிகர்கள் இல்லாமல் உலக கோப்பை இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்