பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 3 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

சர்வதேச கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடங்குவதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிக முனைப்பு காட்டி வருகிறது.

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்றவுள்ள பாகிஸ்தான் அணி 28ம் திகதி லாகூரில் தனி விமானம் மூலம் இங்கிலாந்துக்கு செல்கின்றனர்.

இதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்கள், தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சி உதவியாளர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடைபெறவுள்ளது.

22ம் திகதி அன்று வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று சோதனை நடத்தப்படும்.

அதன் பிறகு வீரர்கள் அனைவரும் 24-ம் திகதி லாகூரில் ஒன்றிணைவார்கள். அங்கு 2-வது முறையாக சோதனை நடத்தப்படும்.

பிறகு நட்சத்திர ஓட்டலில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுடன் வீரர்கள் சில நாட்கள் தனித்தனியே தங்கியிருப்பார்கள்.

சோதனை முடிவில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி

அபித் அலி, பஹார் ஜமான், இமாம் உல்-ஹக், ஷான் மசூத், அசார் அலி (கேப்டன்), பாபர் அசாம் (துணை கேப்டன்), ஆசாத் ஷபிக், பவாத் ஆலம், ஹைதர் அலி, இப்திகர் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது ரிஸ்வான், சர்ப்ராஸ் அகமது, பஹீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவுப், இம்ரான் கான், முகமது அப்பாஸ், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி, சோகைல் கான், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ், இமாத் வாசிம், காஷிப் பாத்தி, ஷதாப் கான், யாசிர் ஷா.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்