இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மாவை பெண்ணாக மாற்றிய புகைப்படத்தை சக அணி வீரரான யுவேந்திர சஹால் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதால், தற்போது அது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பேஸ் ஆப் என்ற செயலி மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த செயலியை வைத்து ஆண்களின் முகத்தைப் பெண்ணாகவோ, பெண்ணின் முகத்தை ஆணாக மாற்றிக் கொள்ளலாம். இது பெரும் நகைச் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதால் பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
So cute u looking Rohitaaaaaa Sharammaaaaa bhaiya @ImRo45 ❤️🤣🤣🙈🙈👀👀 pic.twitter.com/HxftQD3Qer
— Yuzvendra Chahal (@yuzi_chahal) June 18, 2020
அந்த வகையில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவின் புகைப்படத்தை பேஸ் ஆப் மூலம் பெண்ணாக மார்பிங் செய்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சஹால் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தை ரோகித் சர்மாவிற்கு டேக் செய்து ரோகித் சர்மா நீங்க ரொம்ப க்யூட்டா இருக்கீங்க என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட ரோகித் சர்மாவும் பதிலுக்கு அவரை கலாய்க்கும் வகையில் ஒரு போட்டோவை பகிர்ந்து அந்த படத்தில் சாஹல் லூசாக இருந்த டி-ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தார் அதனைச் சுட்டிக்காட்டி துணிக்குள் நீ இருக்கிறாயா அல்லது உனக்குள் துணி இருக்கிறதா என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.