அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம்

Report Print Kavitha in கிரிக்கெட்

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் நடைபெறவிருந்த அனைத்து வகையான விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விளையாட்டு மைதான நிர்வாகங்கள் பயிற்சி மையங்கள் அனைத்தும் பல்வேறு நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.

அதில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியால் வாரியத்தின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கி கொண்டு வருகின்றது.

அந்தவரிசையில் 2016-ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிரேமி ஹிக்கை (54) நீக்கியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆள்குறைக்குப்பு குறித்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் ஏர்ல் எட்டிங்ஸ், கொரோனா பாதிப்பால் பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாகவும் 40 நல்ல பணியாளர்களை இழப்பது வேதனை அளிக்கின்றது.

இதில் அவர்களுடைய தவறு ஒன்றும் இல்லை ஆனால் இதன்மூலம் கிரிக்கெட் பணிகளில் தொடர்ந்து ஈடுபட இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் பதிவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்