சர்ச்சைக்குறிய கருத்தை ட்வீட்டரில் வெளியிட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் நீக்கம்

Report Print Kavitha in கிரிக்கெட்

இந்திய இராணுவ வீரர்கள் பலியான செய்தி குறித்து ட்விட்டரில் தன் சர்ச்சையான கருத்தை பதிவு கூறியதால் மது தொட்டப்பில்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் துவக்கம் முதல், சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் மருத்துவராக இருந்து வந்த மது தொட்டப்பில்லில்.

இவர் ஊரங்கு கால பகுதியில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் இடையேயான மோதல் குறித்து மோசமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் “வீரர்களின் சவப் பெட்டிகளில் பிஎம் கேர்ஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்குமா? என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது என கூறி இருந்தார்.”

இதையடுத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பதிவில் , “டாக்டர் மது வெளியிட்டுள்ள சொந்த கருத்து குறித்த ட்விட்டர் பதிவு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு தெரியாது. அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்