ரோகித் சர்மாவுக்கு ரிஷப் பந்த விடுத்த சவால் ..! நேரலை என்றும் பாராமல் வருத்தெடுத்த ஹிட்மேனின் நச் பதிலடி

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியாவின் அதிரடி மன்னன் ரோகித் சர்மா, தனக்கு சவால் விடுத்த இளம் வீரர் ரிஷப் பந்த்தை நேரலையிலே வருத்தெடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மற்ற விளையாட்டு வீரர்களை போல கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலிருந்த படி சமூக வலைதளம் மூலம் தங்களது ரசிகர்களிடையே நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய நட்சத்திரங்கள் ரோகித்-பும்ரா ஆகியோர் சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடினர்.

இதன்போது, இளம் இந்திய வீரர் ரிஷப் பந்த் கமெண்டில், யார் அதிக தூரம் சிக்ஸர் அடிக்கிறார் என்று பார்ப்போமா? என ஹிட்மேனுக்கு சவால் விடுத்தார்.

இதை படித்த பும்ரா, பந்த்தின் சவால் குறித்து ரோகித் சர்மாவிடம் கருத்து கேட்டார்.

நேரலையில் இருந்த ரோகித், பந்த கிரிக்கெட் விளையாட தொடங்கி ஒரு வருடம் தான் ஆகிறது அதற்குள் என்னுடன் போட்டி போட விரும்புகிறாரா? என வருத்தெடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்