கொரோனா தொற்றை தடுக்க நிதியுதவி வழங்கிய ரோகித் சர்மா!

Report Print Abisha in கிரிக்கெட்

கொரோனா வைரஸ்க்கு எதிரான போருக்கு உதவ இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 75லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 1,251 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்கு தாராளமாக நிதி வழங்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மேலும், பல்வேறு மாநில முதல்வர்களும், முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு பல்வேறு பிரபலங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவும் நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில் கூறியிருப்பதாவது:

"நம் தேசம் மீண்டும் தனது காலில் நிற்க வேண்டும். அந்தப் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. நாம் பிரதமரின் நிவாரண நிதிக்கு எனது பங்காக ரூ.45 லட்சத்தையும், மஹாராஷ்டிரா நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தையும், ஃபீடிங்க் இண்டியா மற்றும் ஆதரவில்லாத நாய்களின் நலனுக்கான அமைப்புக்கு தலா ரூ.5 லட்சத்தையும் அளித்துள்ளேன். நமது தலைவர்களுக்குப் பின்னால் நின்று அவர்களை ஆதரிப்போம்".

என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்