‘கங்குலியிடம் கிடைத்தது... டோனி-கோஹ்லியிடம் கிடைக்கவில்லை’ மனம் திறந்த யுவராஜ் சிங்!

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி மற்றும் கோஹ்லியை விட சவுரவ் கங்குலியிடம் பெரிதும் ஆதரவு கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த ஆதரவின் காரணமாக, தற்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் கீழ் விளையாடியதில் அதிக நினைவுகள் உள்ளன என்று யுவராஜ் சிங் கூறினார்.

நான் சவுரவ் கங்குலியின் தலைமைக்குக் கீழ் விளையாடியுள்ளேன், அவரிடமிருந்து நிறைய ஆதரவு கிடைத்துள்ளது.

அதன்பின் டோனி அணித்தலைவர் ஆனார். கங்குலி-டோனி இருவரில் ஒருவரை தேர்வு செய்வது கடினம்.

கங்குலி எனக்கு அளித்த ஆதரவின் காரணமாக எனக்கு அதிக நினைவுகள் உள்ளன. டோனி மற்றும் விராட் ஆகியோரிடமிருந்து எனக்கு அந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று யுவராஜ் சிங் கூறினார்.

38 வயதான யுவராஜ், இந்தியாவின் 2011ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் அவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

யுவராஜ் சிங் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்