இனி இது நடப்பது கடினம்... டோனி குறித்து முன்னாள் இந்திய அணித்தலைவர் ஓபன் டாக்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பைக்கான இந்திய டி-20 அணியில் நட்சத்திர வீரர் டோனி இடம்பிடிப்பது மிகவும் கடினம் என தான் கருதுவதாக முன்னாள் இந்திய அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கான டி-20 உலகக் கோப்பை அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் திட்டமிட்ட படி டி-20 உலகக் கோப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், உலகக் கோப்பை அணியில் டோனி இடம்பெற வேண்டும் நான் விரும்புகிறேன், ஆனால், இது நடப்பது மிகவும் கடினம்.

அணி முன்னேறியுள்ளது. டோனி பெரிய அறிவிப்புகளை வெளியிடுபவர் அல்ல, எனவே அவர் அமைதியாக விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று கருதுவதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஏற்கனவே டோனியின் தேர்வு ஐபிஎல் விளையாட்டில் அவரது செயல்திறனைப் பொறுத்தது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா பரவுவதால் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்