இலங்கை-இங்கிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ரத்து! உடனே பிரித்தானியா திரும்பும் வீரர்கள்

Report Print Basu in கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதவிருந்து இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் எதிர்வரும் 19ம் திகதி தொடங்கவிருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோய் உலகளவில் மோசமடைந்து வருவதால் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் வரவிருக்கும் டெஸ்ட் தொடரை ஒத்திவைப்பதற்கும் நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.

இலங்கை கிரிக்கெட்டுடன் கலந்துரையாடிய பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் வீரர்கள் பிரித்தானியா திரும்புகின்றனர்.

இந்த நேரத்தில், எங்கள் வீரர்கள் மற்றும் ஆதரவு குழுக்களின் உடல் மற்றும் மன நல்வாழ்வு மிக முக்கியமானது. விரைவில் அவர்களை அவர்களது குடும்பங்களுக்கு வீட்டிற்கு கொண்டு சேர்ப்போம்.

இவை முற்றிலும் முன்னெப்போதும் இல்லாத காலங்கள், இது போன்ற முடிவுகள் கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டவை.

இந்த சூழலில் சிறந்த ஆதரவும் உதவியும் செய்த இலங்கை கிரிக்கெட்டில் உள்ள எங்கள் சகாக்களின் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்த முக்கியமான டெஸ்ட் தொடரை நிறைவேற்றுவதற்காக மிக விரைவில் எதிர்காலத்தில் இலங்கைக்கு திரும்புவதை எதிர்பார்க்கிறோம் என இங்கிலாந்த கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்