ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு! கொரோனா பீதியால் எடுக்கப்பட்ட முடிவு என தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15 திகதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.

இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மார்ச் 29ஆம் திகதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடர் திட்டமிட்ட நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளை காண வரும் அதிகப்படியான ரசிகர்களால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

நாளை நடைபெறும் பிசிசிஐ - ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் இது தொடர்பாக பேசப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்