ஐபிஎல் போட்டிகளுக்கு தடை... மாநில அரசு அதிரடி அறிவிப்பு! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டெல்லியில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் முக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில போட்டிகள் அரங்கத்தின் உள்ளே, ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைபடலாம் என்று கூறப்பட்டது. ஆனால் நிச்சயம் தொடர் நடைபெறும், ஆனால் இது இண்டோர் கேம், அதாவது ரசிகர்கள் இல்லாத தொடராக இருக்கலாம் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளுக்கு அம்மாநிலர அரசு அதிரடி தடைவிதித்துள்ளது.

டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் இந்தாண்டு நடக்குமா என்பதே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்