கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக வரும் புதிய டி20 ! அனல் பறக்கும் போட்டிகள்: மீண்டும் துவக்க வீரராக சச்சின்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுக்காக, உலக சீரியஸ் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் காட்டு தீ பரவியதால், அங்கிருந்த ஏராளமான விலங்குகள் தீயில் கருகி பலியாகின. இதனால் காட்டு தீயினால் ஏற்பட்ட இழப்பிற்காக அங்கு புஷ் பயர் ஆல் ஸ்டார்ஸ் என்ற கிரிக்கெட் போட்டி நடந்தது.

அதில் உலகின் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுக்காக உலக சீரியஸ் என்ற தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவு, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.

மொத்தம் பதினோரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தலைவராக சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவு அணியின் தலைவராக லாராவும் விளையாட உள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங், சந்திரபால், லாரா, ஜாண்டி ரோட்ஸ், முரளிதரன், தில்ஷான் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோர் விளையாடுகின்றனர். இந்த தொடர் வரும் மார்ச் 7-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

மொத்தம் பதினொரு டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இறுதிப்போட்டி மார்ச் 22-ஆம் திகதி மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அவுஸ்திரேலியாவில் ஒரு ஒவர் மட்டுமே சச்சின் விளையாடிதற்கு ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். தற்போது இந்த தொடர் மூலம் சச்சின் மீண்டும் விளையாடவுள்ளதால், ரசிகர்கள் கூட்டம் மைதானத்தில் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்