கோஹ்லியை மிரள வைத்த இந்திய வீரர்... லெக் திசையில் அபாரமாக பவுண்டரி பறக்கவிட்ட காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நவ்தீப் சைனி அடித்த பவுண்டரியை பார்த்து கோஹ்லி கைதட்டி சிரித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை, நியூசிலாந்து 2-0 என்று முன்னிலையுடன் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி அபாரமாக விளையாடி 45 ஓட்டங்கள் குவித்தார். அணியை வெற்றிக்கு அருகே அழைத்து சென்ற அவரால், அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இருப்பினும் அவரின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், நியூசிலாந்து வீரர் வீசிய ஓவரின் போது, லெக் திசையில் சைனி அபாரமாக ஸ்கூப் சாட் அடித்து பவுண்டரி விரட்டினார். இதைக் கண்ட கோஹ்லி கை தட்டி, நம்பவே முடியவில்லை என்பது போல் சிரித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்