அதே ஸ்டைல்... அதே ஷார்ட்! அவுஸ்திரேலியா மண்ணில் முதல் பந்திலே மிரட்டிய சச்சின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் மீண்டும் களத்தில் இறங்கி அற்புதமாக ஆடியோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலிய காட்டுத் தீ-க்கு நிதி திரட்டுவதற்காக அந்த நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் போட்டி மெல்பர்னில் இன்று நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அவுஸ்திரேலியா மகளிர் அணியின் பந்து வீச்சாளர் எல்லிஸ் பெர்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், இந்த போட்டியின் இடைவெளியின் போது, இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓவர் விளையாட வேண்டும், அவர் மைதானத்தில் இறங்கி விளையாடுகிறார் என்று தெரிந்தால், ரசிகர்கள் அதிகம் வருவார்கள்.'

இதன் மூலம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி திரட்ட முடியும் என்றும் கூறியிருந்தார். இதற்கு சச்சின் விளையாடுவதாக அறிவித்தார்.

அதே போன்று இன்றைய போட்டியின் இடைவெளியின் போது இறங்கிய சச்சின், ஒரு ஓவர் விளையாடி 6 ஓட்டங்கள் குவித்தார். இதில் ஒரு பவுண்டரி பறக்கவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்