மருத்துவரின் அறிவுரையை மீறி மீண்டும் கிரிக்கெட் விளையாடும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்!

Report Print Raju Raju in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி இந்திய அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கவுள்ளார்.

அவுஸ்திரேலிய காட்டுத் தீ-க்கு நிதி திரட்டுவதற்காக அந்த நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் போட்டி மெல்பர்னில் இன்று நடைபெற உள்ளது. இதில் ரிக்கி பாண்டிங் வழி நடத்தும் அணியின் பயிற்சியாளராக சச்சின் செயல்படுகிறார்.

இந்தப் போட்டி நடக்கும் அதே மைதானத்தில் முத்தரப்பு தொடரில் அவுஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் போட்டி இடைவேளையின் போது சச்சின் ஒரு ஓவர் விளையாட வேண்டும் என்றும், இதன் மூலம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி திரட்ட முடியும் என்றும் கூறியுள்ளார்.

எல்லிஸ் பெர்ரியின் இந்த கோரிக்கைக்கு சச்சினும் உடனே இசைவு தெரிவித்துள்ளார். சச்சின், தோள்பட்டை காயம் காரணமாக விளையாட கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்