விறுவிறுப்பாக நடந்த டி20 போட்டி! இந்திய அணி அபார வெற்றி

Report Print Raju Raju in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

ஆக்லாந்தில் இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், காலின் முன்றோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதலில் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை அதிகரித்தது.

அணியின் எண்ணிக்கை 48 ஆக இருந்தபோது கப்தில் 26 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து முன்றோ 33 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணியின் ரன் வேகம் குறைந்தது.

கேன் வில்லியம்சன் 14 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 3 ரன்னிலும், ராஸ் டெய்லர் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. டிம் சிபெர்ட் 33 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

இந்தியா சார்பில் ஜடேஜா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், பும்ரா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 7.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்