இந்தியா இதை செய்யவில்லை என்றால்? உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது! ரசிகர்கள் அதிர்ச்சி

Report Print Raju Raju in கிரிக்கெட்

2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி, நீண்ட காலமாக பாகிஸ்தான், தன்னுடைய நாட்டில் சர்வதேச தொடர்களை நடத்துவதிலுருந்து விலகி இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 20 ஓவர் ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இயங்கி வருகிறது.

பாகிஸ்தானுக்குச் சென்று இந்திய அணி, 20 ஓவர் ஆசிய கோப்பையை விளையாடும் நிலைப்பாட்டை இன்னும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை.

இது தொடர்பாக லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி வாசிம் கான், வருகிற செப்டம்பர் மாதம் தங்கள் நாட்டில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்தியா மறுப்பதாக குற்றஞ்சாட்டினார்.

இதனால் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ள மறுப்பதால் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்