இரண்டுமே எங்களுக்கு தான்... இந்திய அணிக்கு சவால்விட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த நாங்கள், அதை இந்தியாவிடம் பிடிப்போம் என்று நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இந்திய அணி, நியூசிலாந்திற்கு சென்றுள்ளது.

இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேக் மேக்மில்லன், சமீபத்தில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நாங்கள் தோல்வியடைந்தோம், அதே போன்று இந்திய அணிக்கெதிராக நாங்கள் இப்போது விளையாட போட தொடர் மிகவும் பெரியது.

இந்திய அணி மூன்று வித தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், தொடர் மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.

அவுஸ்திரேலியாவிடம் நாங்கள் டெஸ்ட் தொடரை இழந்ததால், அதை சரி செய்யும் விதமாக இந்த இரண்டு தொடரையும் நாங்கள் வெல்வோம் என்று சவால்விட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers