டோனி அணித்தலைவராக இருந்த போது சரியாக இருந்தது! ஆனால் இப்போது? ஷேவாக் அதிரடி

Report Print Raju Raju in கிரிக்கெட்

டோனி இந்திய அணித் தலைவராக இருந்த போது வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விடயத்தை சரியாக செய்தார் என ஷேவாக் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

டோனிக்கு பிறகு இந்திய அணியில் நிலையான கீப்பர் இல்லாத நிலை உள்ளது. பண்ட்டிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டபோதும் அவர் கீப்பராக பல தவறுகளை செய்தார். பின்னர் பண்ட்க்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. ராகுல் கீப்பராக களம் இறங்கினார்.

இது குறித்து பேசியுள்ள வீரேந்திர ஷேவாக், 5-வது வீரராக களம் இறக்கப்பட்டு சரியாக ஜொலிக்காததால் ராகுலின் இடத்தை மாற்ற தற்போதைய இந்திய அணி யோசிக்கும்.

ஆனால் டோனி கேப்டனாக இருந்தபோது இந்த மாதிரி பிரச்னை எழவில்லை. வீரர்களின் பேட்டிங் வரிசையில் அவர் தெளிவாக இருந்தார். வீரர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க டோனி வாய்ப்புகளை வழங்கினார்.

வீரர்கள் சில போட்டிகளில் சரியாக சோபிக்கவில்லை என்றால், அவர்களை ஓரமாக அமர வைப்பதன்மூலம் அவர்கள் சிறந்த வீரராக வர முடியாது. அவர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers