இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தற்கொலை முயற்சி! கிரிக்கெட் உலகினர் அதிர்ச்சி

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2007-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பிரவீன் குமார் அதற்கடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் கோப்பையை டோனி தலைமையிலான இந்திய அணி வெல்வதில் முக்கியப் பங்காற்றியவர்.

தன்னுடைய துல்லியமான ஸ்விங் பந்துவீச்சின் மூலம், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்களையே மண்ணைக் கவ்வச்செய்தவர் பிரவீன் குமார்.

திறமையான வீரராக இருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார் அவர். வலைப்பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவை கிண்டல் செய்த ரசிகர் ஒருவரை, பிரவீன் குமார் ஸ்டம்பை பிடுங்கித் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

2014-ல் இருந்து இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்துவந்த அவர், கடந்த ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

தன்னுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றமும், தனிமையும் அவருக்கு கடுமையான மன உளைச்சலுக்குத் தள்ளியுள்ளது.

ஒருகட்டத்தில் மன அழுத்தத்தைப் பொறுக்க முடியாத பிரவீன் குமார், தற்கொலை செய்துகொள்ளத் துணிந்திருக்கிறார். ஆனால் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்த அவர், தற்கொலை முடிவைக் கைவிட்டு, மனநல மருத்துவரை அணுகியுள்ளார்.

தற்போது மன அழுத்தத்தில் இருந்து மீண்டுள்ள பிரவீன் குமார், உத்தரபிரதேச ரஞ்சி கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers