உலகின் தலைசிறந்த வீரர் இவர் தானாம்!..

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் என்றால் அது விராட் கோஹ்லி தான் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான வாகன் தெரிவித்துள்ளார்.

டேனியல் அலெக்ஸாண்டர் என்பவர் வெளியிட்ட டுவிட்டுக்கு பதிலளிக்கும் வகையிலேயே வாகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதாவது, ஸ்டீவ் ஸ்மித் தான் மூன்று வடிவிலான போட்டிகளுக்கு தற்போது சிறந்த வீரர், மீண்டும் ஒருமுறை அதை பதிவிட்டிருந்தார் என எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இது தவறான ஒன்று, கோஹ்லி தான் தலைசிறந்த வீரர், ஸ்டீவ் ஸ்மித் அல்ல என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பிஞ்சும் கோஹ்லியே சிறந்த வீரர் என பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers