அவுஸ்திரேலியாவுடன் இந்திய வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது ஏன்? தெரியவந்த காரணம்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஏன் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுகின்றனர் என்ற காரணம் தெரியவந்துள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித்தின் அபாரமான சதத்தால், அந்தணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்கள் குவித்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் 131 ஓட்டங்களும், மார்னஸ் லப்ஷன்கா 54 ஓட்டங்களும் குவித்தனர்.

இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர். அவுஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தவதற்காகவே இப்படி ஒரு பேட்ஜை அணிந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலானது.

ஆனால் உண்மையான காரணம் அதுவில்லை எனவும், சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பாபு நட்கர்னி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்