இந்திய வீரரின் அற்புதமான பீல்டிங்.... செம கோபத்தில் ஸ்மித்தை திட்டிய படி வெளியேறிய பின்ச் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பின்ச் ரன் அவுட் ஆனவுடன், ஆதங்கத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி, சற்று முன் வரை 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் ஆட்டத்தின் 8-வது ஓவரை மொமது ஷமி வீசினார், அதை எதிர் கொண்ட ஸ்மித் ஆப் திசையில் அடித்துவிட்டு ஓட, அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த ஜடேஜா அற்புதமாக பீல்டிங் செய்ய, ஸ்மித் மற்றும் பின்ச் நிலை தடுமாறினர்.

இதனால் ஜடேஜா துல்லியமாக ஸ்டம்பை நோக்கி பந்தை வீச, ஆனால் பந்தானது ஸ்டம்பில் படாமல் சென்றது, இதனால் பின்ச் மீண்டும் ரன் அவுட் ஆகாமல் இருக்க, கிரிசிற்குள் ஓடி வருவதற்குள் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பின்ச், ஸ்மித்தை கோபத்தில் திட்டியபடி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்