குசால் பெரரோ விளையாடாததற்கு இவர்கள் இருவர் தான் முக்கிய காரணம்..! வெளிப்படையாக கூறிய இலங்கை தேர்வாளர்

Report Print Basu in கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை நட்சத்திர வீரர் குசால் பெரேரா இடம்பெறாதது குறித்த காரணத்தை இலங்கை அணியின் தலைமை தேர்வாளர் அசாந்தா டி மெல் வெளியப்படுத்தியுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 19ம் திகதி ஹராரேவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்காக திமுத் கருணாரத்ன தலைமையில் தினேஷ் சண்டிமால் ஏஞ்சலோ மேத்யூஸ் அடங்கிய 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. இதில், குசால் பெரேரா இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதற்கான காரணத்தை இலங்கை அணியின் தலைமை தேர்வாளர் அசாந்தா டி மெல் வெளியப்படுத்தியுள்ளார்.

குசால் ஒரு நல்ல வீரர், எங்களுக்கு அது தெரியும். இருப்பினும் இந்த தொடரில் குசால் விளையாடப் போகிறார் என்றால், அவர் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது. நிரோஷன் டிக்வெல்லா விக்கெட் கீப்பராக இருக்கப் போகிறார்.

அதுபோன்ற சூழ்நிலையில், குசால் பெரேரா விளைாட வேண்டுமென்றால் தினேஷ் சண்டிமால் அல்லது ஏஞ்சலோ மேத்யூஸை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனினும், அணியை நடுநிலைப்படுத்த அணித்தலைவரும் பயிற்சியாளரும் சண்டிமால்-மேத்யூஸ் இருவரையும் விளையாட வேண்டும் என்று விரும்பினர். அதனால் தான் பெரேராவுக்கு அணியில் இடமில்லை.

மேத்யூஸ் மற்றும் சண்டிமால் ஆகியோர் இலங்கையின் முன்னணி வரிசை தேர்வாக இருந்தனர்.

குசால் தென் ஆப்பிரிக்காவில் விளையாடினார், ஏனெனில் மேத்யூஸ் மற்றும் சண்டிமால் ஆகியோர் அணியில் இல்லை. இப்போது இருவரும் திரும்பி வந்துள்ளனர், அதனால்தான் குசால் ஜிம்பாப்வேயில் டெஸ்ட் தொடரில் குசால் விளையாட மாட்டார்.

அவர் இலங்கையிலே தங்கி வரவிருக்கும் ஒரு நாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிக்கு தயாராவது நல்லது என இலங்கை அணியின் தலைமை தேர்வாளர் அசாந்தா டி மெல் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers