தலையில் விராட் கோஹ்லியின் முகம்; வித்தியாசமான ஹேர்ஸ்டைலால் வைரலாகும் ரசிகர் !!

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
171Shares

விராட் கோஹ்லியின் உருவத்தை தலையில் வரைந்து கொண்டு வந்த இளைஞரின் புகைப்படம் ஒன்று வைரலாகி உள்ளது.

ஆக்ரோஷ வீரரான கோஹ்லிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர், இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரான சிராக் கிளாரே தலையில் கோஹ்லியின் உருவத்தை வரைந்துள்ளார்.

கடந்த செவ்வாயன்று மும்பை வான்கடே மைதானத்துக்கு போட்டியை காண வந்த அவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கினர்.

அத்துடன் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, “சிறந்தவரான விராட் கோஹ்லி இதயத்திலிருந்து தலைக்கு” என குறிப்பிட்டிருந்தார்.

பல ஆண்டுகளாக கோஹ்லியின் ஒவ்வொரு போட்டியையும் விடாமல் கண்டு ரசிக்கிறேன். அவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக ஆனதிலிருந்தே அவருக்கு நான் ரசிகராக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கோஹ்லியை நேரில் சந்திப்பதே தன்னுடைய வாழ்நாள் கனவு என கூறும் சிராக் கிளாரே, அவரை கண்டதும் கால்களை தொட்டு வணங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்