டோனியை கைவிட்ட பிசிசிஐ: ஒப்பந்தப் பட்டியலில் இருந்து விடுவிப்பு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

பிசிசிஐயின் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் டோனியின் பெயர் இடம் பெறவில்லை என தெரியவந்துள்ளது.

வருடாந்திர (அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020) இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதில் ஏ பிளஸ் பட்டியலில் உள்ளவர்களுக்கு 7 கோடி ஆண்டு ஊதியமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏ கிரேடு பட்டியலில் உள்ளவரகளுக்கு 5 கோடி, பி கிரேடு பட்டியலில் உள்ளவர்களுக்கு 3 கோடி, சி கிரேடு பட்டியலில் உள்ளவர்களுக்கு 1 கோடி என்பன முறையே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ பிளஸ் பட்டியலில் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏ கிரேடு பட்டியலில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், சமி, இசாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிசப் பண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பி கிரேடு பட்டியலில் சஹா, உமேஷ் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சி கிரேடு பட்டியலில் கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், மணீஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, சர்துல் தாகூர், ஸ்ரேயஸ் ஐயர், வாசிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் இந்த மூன்று பட்டியலிலும் டோனியின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்