மூளையில் அதிர்ச்சி: ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய அணி வீரரான ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய போது 44வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார்.

இந்த ஓவரின் 2-வது பந்தை பவுன்சராக வீசினார். ரிஷப் பண்ட் அதை லெக் சைடு தூக்கி அடிக்க முயன்றார்.

பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் ரிஷப் பண்ட் அதிர்ச்சிக்குள்ளானார்.

இந்திய அணி டாக்டர் அவரை பரிசோதித்ததில் மூளை அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரியவந்தது.

இதனையடுத்து ரிஷப் பண்டுக்கு பதிலாக கே.எல்.ராகுல் பீல்டிங் செய்தார், இதனை தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்