10 விக்கெட்டுகள்... 255 ஓட்டங்கள்; அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 256 நிர்ணைத்த இந்தியா

Report Print Abisha in கிரிக்கெட்

இந்திய அவுஸ்திரேலிய ஆட்டத்தில், 10 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்கள் எடுத்துள்ளது இந்தியா

இந்திய அவுஸ்திரேலியா ஒருநாள் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் டாஸ்க் வென்ற அவுஸ்திரேலிய அணி, பந்து வீச முடிவு செய்தது. முதலில், துடுப்பெடுத்தாடிய இந்தியா 49.1 ஓவரில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ஓட்டங்கள் எடுத்து அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 256-யை நிர்ணைத்துள்ளது.

இதில், ரோகித் சர்மா 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மேலும், விராட் கோஹ்லி 16ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் 4 ஓட்டங்களிலும், ரிசபந்த் 28 ஓட்டங்களிலும், ரவீந்தர ஜடேஜா 25ஓட்டங்களிலும், சர்துல் தாகுர் 13 ஓட்டங்களிலும், முகமது சமீம் 10 ஓட்டங்களிலும், குல்தீப் யாதவ் 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து சிகர் தவான் 74 ஓட்டங்கள் எடுத்து, அரை சதத்தை கடந்து அதிக ஓட்டங்கள் குவிக்க காரணமாக இருந்தார். பும்ரா ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், ஆட்டமிழக்காமலும் இந்தியா துடுப்பாட்டதை முடித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்