ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு! அணியில் சேர்க்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி 19ஆம் திகதியும், இரண்டாவது போட்டி வரும் 27ஆம் திகதி நடக்கவுள்ளது.

இரண்டு போட்டிகளுமே ஜிம்பாப்வே தலைநகர் Harare-ல் தான் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

குசல் பெரேரா அணியில் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் நட்சத்திர வீரர்களான மேத்யூஸ், சண்டிமால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி விபரம் வருமாறு,

திமுத் கருணரத்னே (அணித்தலைவர்), ஒஷாடா பெர்ணாண்டோ, குசல் மெண்டீஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், லகிரு திருமன்னே, தனஞ்ஜெய டி சில்வா, நிரேஷன் டிக்வெல்ல, தில்ருவன் பெரேரா, லசித் எம்புல்டினியா, லஹிரு குமர, விஷ்வ பெர்ணாண்டோ, கசுன் ரஜிதா, லக்‌ஷன் சந்தகன், சுரங்க லக்மல்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்