டி.வி நிகழ்ச்சியில் முதன் முறையாக கங்குலி செய்த செயல்...! வைரலாகும் வீடியோ.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி ஹர்பஜனுடன் நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பணியாற்றி வரும் கங்குலி, கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த மரியாதை உடையவராக திகழ்கிறார்.

இந்நிலையில், பெங்கால் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற வினாடி வினா போட்டியில் ஹர்பஜன், ஜாகீர், சேவாக், கைஃப், வி.வி.எஸ்.லஷ்மன் மற்றும் கங்குலி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபல பாடகி உஷா உதூப் ‘செனொரிட்டா’ என்ற பாடலைப் பாடினார்.

இதற்கு நடனமாட தொங்கிய ஹர்பஜன் சிங், கங்குலியை அழைத்து வர, இருவரும் சேர்ந்து அசத்தலாக ஆடினர். இது கங்குலியின் ரசிகர்களுக்கு விருந்ததாக அமைந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்