ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல வீரருக்கு தடை!

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆல் ரவுண்டர் கிறிஸ் கிரீன் மூன்று மாதங்களுக்கு பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயது இளம் ஆல்ரவுண்டர் கிறிஸ் கிரீன். இவரை கொல்கத்தா அணி, ஐபிஎல் ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு எடுத்தது.

தற்போது பிக்பேஷ் உள்ளூர் லீக் போட்டியில் ஆடிவரும் கிறிஸ் கிரீனின் பந்துவீச்சு விதிகளுக்கு புறம்பாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனால் அவரை பரிசோதிக்க வேண்டியிருப்பதால், 3 மாதங்களுக்கு அவர் பந்துவீச அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பந்துவீச மட்டும்தான் 3 மாதங்கள் தடையே தவிர, அவர் அணியில் இடம்பெற்று துடுப்பாட்டம் ஆடலாம்.

மேலும் கிறிஸ் அவுஸ்திரேலியாவில் பந்து வீச மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என தெரியவந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்