இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட இலங்கை நட்சத்திர வீரர்: கசிந்தது காரணம்

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டி -20 போட்டியில் இலங்கை அணியின் விளையாடும் 11 வீரர்கள் பட்டியலில் குசால் மெண்டிஸ் இடம் பெறுவது சாத்தியமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது.

இதற்காக மலிங்கா தலைமையிலான 16 அடங்கிய இலங்கை டி-20 அணி இன்று இந்தியா புறப்பட்டது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி 5ம் திகதி கவுகாத்தியில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்தியா சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள 25 வயதான நட்சத்திர வீரர் குசால் மெண்டிஸ், முதல் டி-20 போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்வுக் குழு கூட்டத்தில் கலந்துக்கொண்ட அதிகாரி கூறியதாவது, மெண்டிஸ் அணியில் சேர்க்கப்படுவது தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் வற்புறுத்தலின் பேரில் செய்யப்படவில்லை, இது அனைத்து தேர்வாளர்களும் அணித்தலைவருடனும் நன்கு விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என கூறினார்.

இதன் மூலம் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் மெண்டிஸ் அணியில் இடம்பெற வேண்டும் என தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மட்டுமே விரும்பினார் என்ற ஊகத்தை அவர் நிராகரித்தார்.

மேலும், மெண்டிஸ் முதல் போட்டியில் விளையாடாமல் இருக்கலாம், ஆனால் அவர் நம்பிக்கையை மீண்டும் பெற அணியில் சேர்க்கப்பட்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது எங்கள் பயிற்சி ஊழியர்கள் அவரை ஊக்குவிப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.

சுற்றுப்பயணத்திற்கு துணை அணித்தலைவர் தெரிவு செய்யவில்லை. அந்த நிலைமை ஏற்பட்டால், வீரரின் திறமையை பொறுத்து துணை அணித்தலைவர் அறிவிக்கப்படுவார்.

அணி நிர்வாகம் துணைத் தலைவரின் பெயரை அறிவிக்கும், பின்னர் தேர்வாளர்களின் ஒப்புதல் தேவையில்லை என இலங்க அணி மேலாளரும், இந்திய சுற்றுப்பயணத்திற்கான தேர்வாளருமான அசாந்தா டி மெல் விளக்கினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...