ஐபிஎல்லில் நான் இப்படி அவுட்டாக்குவேன்! டெல்லி அணியில் வாங்கப்பட்ட தமிழக வீரர் கொடுத்த பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணி வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், கிரிஸை விட்டு வெளியேறினால் மான்கட் முறையில் அவுட் செய்வேன் என்று ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் நடைப்ற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்களின் ஏலத்தின் போது, பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அஸ்வினை, டெல்லி அணி வாங்கியது.

இந்நிலையில் டுவிட்டரில் இணையவாசி ஒருவர் அஸ்வினிடம், 020-ம்ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளீர்கள், எந்த முக்கியமான பேட்ஸ்மேன்களை மன்கட் அவுட் செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்ப, அதற்கு அஸ்வின் நான் பந்துவீசும் போது எந்த வீரர் கிரீஸை விட்டு வெளியே சென்றாலும் மன்கட் அவுட்செய்வேன் என்று பதில் அளித்தார்.

கடந்த ஐபிஎல் சீசனின் போது, ராஜஸ்தான் வீரர் பட்லரை அஸ்வின் மான்கட் முறையில் அவுட்டாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்