20 பந்துக்கு 40 ரன்... வித்தியாசமாக சிக்ஸர் அடித்த ஆப்கானிஸ் தான் வீரர்! குழம்பி போன வீரர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் கீழே உட்கார்ந்த நிலையில் சிக்ஸர் அடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரைப் போன்று, உலகின் பல்வேறு நாடுகளில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிட்னி தண்டர்ஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணி வெறும்3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் ஆடுகளத்தில் உட்கார்ந்து அடித்த சிக்சர் அடித்து மிரள வைத்தார்.

20 பந்துக்கு 40 ஓட்டங்கள் தேவை என்ற பரபரப்பான நிலையில் ரஷித்கானின் இந்த ஷாட் வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களை இது எப்படி சாத்தியம் என்று இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை இது போன்று எதிர்பாரத பவுண்டரி, சிக்ஸர்கள் எல்லாம் சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...