பாட்டு பாடிக்கொண்டு பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட சேவாக்... தனது அதிரடியின் ரகசியத்தை வெளியிட்டார்

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய அதிரடி வீரர் சேவாக் தனது அதிரடி துடுப்பாட்டத்தின் ரகசியத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மன்னாக திகழ்ந்த சேவாக், அவர் அமெரிக்காவில் நடந்த டி 20 போட்டியின் போது, ஆலன் டொனால்ட் வீசிய பந்தை பாடிக்கொண்டே சிக்ஸர் அடிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

துடுப்பாடும் போதோ அல்லது வாழ்க்கையிலோ உங்கள் இசையை பாடிக்கொண்டே இருங்கள் என அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் சேவாக் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்காக விளையாடிய மிகச்சிறந்த தொடக்க துடுப்பாட்டகாரர்களில் சேவாக் ஒருவர். அவர் 104 டெஸ்ட் போட்டிகளில் 8586 ஓட்டங்களும், 251 ஒருநாள் போட்டிகளில் 8273 ஓட்டங்களும் எடுத்தார்.

19 டி-20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய 394 ஓட்டங்கள் எடுத்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...