2020 இந்தியா தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு..! 18 மாதங்களுக்கு பின் மலிங்கா தலைமையில் களமிறங்கும் நட்சத்திரம்

Report Print Basu in கிரிக்கெட்

2020 இந்திய சுற்றுப்பயணத்திற்கான 16 பேர் அடங்கிய இலங்கை டி-20 அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி 2020 ஜனவரி 5ம் திகதி கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மலிங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 18 மாதங்களுக்கு பின்னர் முன்னாள் அணித்தலைவர் மேத்யூஸ் இடம்பிடித்துள்ளார்.

இலங்கை வீரர் நுவன் பிரதீப் காயமடைந்த நிலையில் தேர்வாளர்கள் மாற்று வீரர் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிரதீப்-க்கு பதிலாக கசுன் ராஜிதா அணியில் இடம்பெற சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் முடிவடைந்த டெஸ்ட் தொடரின் போது, தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்ட ராஜிதா, இன்று உடற்பயிற்சி சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

இலங்கை அணி வீரர்கள் விபரம்:

 • லசித் மலிங்கா (அணித்தலைவர்)
 • குசால் பெரேரா
 • தனுஷ்க குணதிலக்க
 • அவிஷ்க பெர்னாண்டோ
 • பானுக்க ராஜபக்ஷ
 • ஒசாடா பெர்னாண்டோ
 • தசுன் சானக்க
 • ஏஞ்சலோ மேத்யூஸ்
 • நிரோஷன் டிக்வெல்ல
 • குசால் மெண்டிஸ்
 • வனிந்து ஹசரங்க
 • லக்ஷன் சண்டகன்
 • தனஞ்ஜெய டி சில்வா
 • லஹிரு குமாரா
 • இசுரு உதான

காயமடைந்துள்ள நுவன் பிரதீப்-க்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...