மைதானத்தின் திரையில் அப்பட்டமாக தெரிந்த காட்சி... சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டான ஜடேஜா வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-மேற்கிந்தியா தீவு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 288 ஓட்டங்கள் குவித்த போதும், இந்த இலக்கை அசால்ட்டாக எட்டி மேற்கிந்திய தீவு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் கீமோ பால் வீசிய 47-வது ஓவரை எதிர் கொண்ட இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, அடித்து விட்டு ஓடிய போது ரோஸ்டன் சேசால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

பந்தானது ஸ்டம்பின் மீது பட்ட போதும், மேற்கிந்திய தீவு வீரர்கள் அந்தளவிற்கு உறுதியாக அவுட் கேட்கவில்லை, அப்போது ரன் அவுட் செய்த ரோஸ்டன் சேஸ் அவுட் கேட்டார், ஆனால் நடுவர் அதை இல்லை என்று சொன்னது போல் இருந்ததால் ரோஸ்டன் சேஸ் சாதரணமாக சென்றுள்ளார்.

ஆனால் அப்போது அங்கு மைதானத்தின் ரீப்ளேயின் போது, ஜடேஜா அவுட் என்பது தெரிந்ததால், உடனடியாக அடுத்த பந்து வீசுவதற்குள் மேற்கிந்திய தீவு அணியின் தலைவரான பொல்லார்ட் இது அவுட் இல்லையா? என்று கேட்க, அதன் பின் நடுவர் மூன்றாவது நடுவரிடம் சென்றார்.

அப்போது ரன் அவுட் கொடுக்கப்பட்டதால், ஜடேஜா பரிதாபமாக வெளியேறினார். நடுவர் இதை முன்னரே அறிந்திருக்கவில்லையா? ஏன் ரோஸ்டன் சேஸ் அவுட் கேட்ட போதே அவர் மூன்றாவது நடுவரிடம் செல்லவில்லை? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்