இந்திய பிரபலம் தேடிய தமிழர் இவர் தான்... யார் இவர்? நினைத்து கூட பார்த்தில்லை என நெகிழ்ச்சி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் எனக்கு அறிவுரை கூறிய ரசிகரை நான் இப்போது பார்க்க விரும்புகிறேன் , கண்டுபிடிக்க நீங்கள் எனக்கு உதவு வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது அவர் யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில், சென்னை ரசிகர் பற்றி கூறியிருந்தார்.

அதன் பின் டுவிட்டர் பக்கத்தில், எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன,

IND vs WI தொடரின் போது சென்னை Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய அறிவுரை மிகவும் உதவியது.

அவரை இப்போது சந்திக்க ஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவவேண்டும் என கூறியிருந்தார். Elbow Guard என்பது பேட்ஸ்மேன்கள் தங்களுடைய கையில் பாதுகாப்பிற்காக பயன்படுத்துவது ஆகும், அதைப் பற்றி அவர் கூறியதை மறக்கவே முடியாது என்று சச்சின் கூறியது சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அவர் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அவர் தமிழகத்தின் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குரு பிரசாத் எனவும், கடந்த 2001-ஆம் ஆண்டில், இந்தியா - அவுஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு, இங்கு நடந்த பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த சச்சின் டெண்டுல்கர், தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

அவர் இருந்த 2 -வது தளத்தில் கண்காணிப்பாளராக இருந்த குரு பிரசாத், தனது வருகைப் பதிவு நோட்டில், சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்கிவிட்டு, உங்களிடம் ஆலோசனை ஒன்று கூறலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு சச்சின் சொல்லுங்கள் என்று சொன்னதும், சச்சினின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும், எல்போ கார்டு தொந்தரவு செய்வதால், அது சம்பந்தமான விஷயங்களை சொல்லியுள்ளார் குரு பிரசாத்.

குரு பிரசாத்

இதனை நிச்சயம் எடுத்துக் கொள்வதாக கூறிய சச்சின், தனது அடுத்த ஆட்டத்திலேயே எல்போ கார்டு மாற்றத்தையும் செயல்படுத்தியுள்ளார். இதனை டிவியில் பார்த்து மகிழ்ந்த குரு பிரசாத், தனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே இந்த மகிழ்ச்சியான விஷயத்தை அப்போது கூறியுள்ளார்.

இத்தனை வருடங்கள் இதை சச்சின் ஞாபகம் வைத்திருப்பார் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, லகத்தில் வேறு யாரும் சொல்லாததை, என் மூலம் கடவுள் அவருக்குச் சொல்ல வைத்துள்ளார் என்பதை நினைத்து, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தனது வீட்டிற்கு சச்சின் வந்தால், மிகவும் மகிழ்ச்சியடைவேன், அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்