இலங்கை வீரர்கள் உயிருடன் இருப்பார்கள் என்று நம்புகிறோம்.. ஆத்திரத்தில் மஹேல ஜெயவர்தன

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட்டின் மீது முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்தன கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு முதல் தர ஒரு நாள் போட்டிக்கான நெரிசலான கால அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சமீபத்தில் வெளியிட்டது. 66 போட்டிகளை பத்து நாட்களுக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடர் டிசம்பர் 14ம் திகதி தொடங்கியது.

25 அணிகள் நான்கு பிரிவுகளாக 66 முதல் சுற்று போட்டிகளில் பத்து நாட்களுக்குள் எட்டு காலிறுதிப் போட்டியாளர்களைத் தீர்மானிக்கும். காலிறுதி டிசம்பர் 28 திகதியும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் முறையே டிசம்பர் 29 மற்றும் 31 ஆகிய திகதிகளிலும் நடைபெறும்.

இது அதிகாரப்பூர்வ இலங்கை கிரிக்கெட்டின் முதல் தர ஒருநாள் போட்டிக்கான அட்டவணை. இதன் மூலம் தரமான வீரர்களை எப்படி நாம் உருவாக்க முடியும். போட்டிக்கு பின்னர் வீரர்கள் உயிருடன் இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என மஹேல ஜெயவர்தன ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜெயவர்தன சரியாகச் சுட்டிக்காட்டியபடி, ஒருநாள் அட்டவணை கிரிக்கெட் வீரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், அவர்களுக்கு ஓய்விக்கு போதுமான நேரம் இல்லாமல் தொடர்ந்து விளையாடும் போது உள்நாட்டு தொடர் முழுவதுமாக பாதிக்கும்.

உள்நாட்டு கிரிக்கெட் தொடர் முதலில் டிசம்பர் 6ம் திகதி நான்கு நாள் போட்டிகளுடன் தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், திருத்தப்பட்ட உள்நாட்டு கட்டமைப்பிற்கான அவசர பொதுக் கூட்டத்தில் (ஈஜிஎம்) பொது உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற இலங்கை கிரிக்கெட் தவறிவிட்டது. எனவே, ஒரு நாள் போட்டி தொடர் மூலம் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஒருநாள் திட்டமிடப்பட்டிருப்பது நெரிசலானது என்பது உண்மைதான் என்று போட்டிக் குழுத் தலைவர் பந்துலா திசாநாயக்க ஒப்புக் கொண்டார்.

நாங்கள் டிசம்பர் 6ம் திகதி நான்கு நாள் போட்டிகளுடன் உள்நாட்டு போட்டியைத் தொடங்கவிருந்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவசர பொதுக் கூட்டத்தில் (ஈஜிஎம்) சரியான நேரத்தில் அதை அங்கீகரிக்க முடியவில்லை. எனவே சீசனின் தொடக்கத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டது, இதன் விளைவாக நெரிசலான ஒருநாள் கால அட்டவணை வெளியிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்