கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு வந்த இரண்டு இந்திய வீரர்கள்! யார் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான டோனி மற்றும் கோஹ்லி கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்திற்கு வந்த இந்திய வீரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி தன்னுடைய அற்புதமான துடுப்பாட்டம் மூலம் எதிரணியை கலங்கடித்து வருகிறார். குறிப்பாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் எதிரணிக்கு பீதியை கிளப்பும் வீரராக இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான டெஸ்ட் தரவரிசை பட்டியலில் கூட, அவுஸ்திரேலியா அணி வீரரான ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில் கடந்த 2010 முதல் 2019-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வரிசையில் கோஹ்லி மற்றும் டோனி முதல் இடம் பிடித்துள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

டோனி உலகக்கோப்பை தொடருக்கு எந்த ஒரு தொடரிலும் ஓய்வில் இருக்கிறார். வரும் ஜனவரி மாதம் முதல் டோனி மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...