பந்தை விட்டு வேடிக்கை பார்த்த அவுஸ்திரேலிய வீரர்... ஸ்டம்ப்பை தெறிக்கவிட்டு மிரட்டிய சவுத்தியின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேத்யூ வேட்டின் விக்கெட்டை வீழ்த்திய சவுத்தியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 416 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் 12 ஓட்டங்கள் எடுத்திருந்த அவுஸ்திரேலிய வீரர் மேத்யூவேட், நியூசிலாந்து பந்து வீச்சாளரான சவுத்தியின் பந்து வீச்சை எதிர்கொண்ட போது, பந்தை கீப்பருக்கு செல்லும் படி பேட்டை உயர்த்தினார்.

ஆனால் பந்தானது ஸ்டம்பை பதம் பார்த்ததால், வேட் பெளலியன் திரும்பினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்